வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை முன்னேற்று வதற்காக பல அமைப்புகளை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழு ஒன்று அமைக்கப்படுகிறது. 'முன்னேற்றம்' (Uplift) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அக் குழுவில் எட்டுப் பேர் இடம்பெற்று இருக்கிறார்கள். இரண்டாவது கல்வி அமைச்சர் இந்திராணி ராஜா அதற்குத் தலைமை தாங்கு வார். அதில் சமூக, குடும்ப மேம் பாட்டுத் துணை அமைச்சர் சேம் டான், தேசிய வளர்ச்சி மற்றும் மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகியோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். சமூக முன்னேற்றம் பற்றி பரவலாக பேசப்படும் ஒரு நிலை யில் இந்தச் சிறப்பு பணிக் குழு அறிவிப்பு இடம்பெறுகிறது.
இந்தப் புதிய குழு பற்றி குமாரி இந்தி ராணி ராஜா நேற்று செய்தியாளர் கள் கூட்டத்தில் அறிவித்தார். புதிய பணிக்குழு, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தனது பரிந்துரைகளைத் தாக்கல் செய்யும். வசதி குறைந்த சிறார் கள், அவர்களின் குடும்பத்தாரு டன் செயல்பட்டு வரும் பள்ளிக் கூட ஆசிரியர்கள், சமூக ஊழியர் கள், சுயஉதவிக் குழுக்கள், சமூக பங்காளிகளுடன் இந்தக் குழு கலந்து ஆலோசிக்கும்.

