கிரிஸ்: பிறருக்கு உதவுவது பேரின்பம்

கிரிஸ்: பிறருக்கு உதவுவது பேரின்பம்

1 mins read
3afc33cd-bfc8-4962-a9c0-2acf57e071cd
-
Google News Preferred Icon

ப. பாலசுப்பிரமணியம்

உள்ளூர் பல்கலைக்கழகத்தில் தாம் விரும்பிய உளவியல் துறையில் பயில இடம் கிடைக்கவில்லையே என நொந்துபோய் குடியிருப்பாளர் சந்திப்புக்கு தமது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்திக்க வந்திருந்தார் ஓர் இளையர். அவருக்கு அடித்தள அமைப்பு தொண்டூழியரான கிரிஸ் செல்வகுமார் குணசேகரன் உதவி னார். அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பல்கலைக் கழகம் ஒன்றில் அவ்விளையருக்கு இடமளிக்கப் பரிந்துரைக் கடிதம் ஒன்றை எழுதினார்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அவ்விளையரின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து அவர் விரும்பிய துறையில் பயில வாய்ப்புத் தந்தது. இவ்வாறு கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஓர் அடித்தளத் தொண்டூழியராகப் பல குடியிருப் பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் கிரிஸ். நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் பயிலும்போது நீ சூன் சென்ட்ரல் சமூக மன்றத்தில் தொண்டூழியம் புரியத் தொடங்கிய இவர், தற்போது சி யுவான் சமூக மன்ற இளையர் நிர்வாகக்குழுவிலும் இந்தியர் நற்பணிச் செயற்குழுவிலும் தொண்டூழியராக இருக்கிறார்.

கணக்கியல் துறையில் பட்டயக் கல்வியை முடித்த இந்த 25 வயது இளையர், தாம் வசிக்கும் அங் மோ கியோ, ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள வசிப்போர் குழுவிலும் சேவையாற்ற நேரம் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.