மருத்துவக்கூட இணைப்பு: கண்காணிக்கும் ஆணையம்

மருத்துவக்கூட இணைப்பு: கண்காணிக்கும் ஆணையம்

1 mins read

தனியார் மருத்துவ சோதனைக் கூடம் இரண்டின் இணைப்பு தொடர்பில் போட்டித்தன்மை மீறப் பட்டதா என்று சிங்கப்பூர் போட் டித்தன்மை, பயனீட்டாளர் ஆணை யம் ஆராய்வதாகத் தெரிவித்தி ருக்கிறது. டிபிஜி கேப்பிட்டல் ஏ‌ஷியா என்ற நிறுவனம், 'இனோ வேட்டிவ் டைக் னோஸ்டிக்ஸ் என்ட் குவெ ஸ்ட் லெபொ ரெட்டரிஸ்' என்ற மற்றொரு நிறு வனத்தைச் சொந்தமாக்கிக் கொள் வதால் இந்தத் துறையில் போட்டித் தன்மை பாதிக்கப்படலாம் என்று ஆணையம் தெரிவித்தது. இந்த வர்த்தக முடிவு தொடர் பான ஆய்வின் இரண்டாம் கட்டத் தை ஆணையம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வு 120 நாட்களில் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர், போட் டித்தன்மை குறித்த தங்கள் அக்க றைகளை முன்வைக்கலாம். ஒன்றாக இணைந்த இந்த நிறுவனங்கள், இணைப்புக்கு முன் னர் மிகவும் நெருக்கமான போட்டி யாளர்களாக இருந்ததாக ஆணை யம் குறிப்பிட்டது. மருத்துவ மனையின் மருத்துவக் கூடங்கள் உள்ளிட்ட இந்தத் துறையின் மாற்று கூடங்கள் வழங்கும் சேவைகள், இந்த இரண்டு கூடங் களின் சேவைகளுக்கு மாறாக இருப்பதாக ஆணையம் தெரி வித்தது. ஆகஸ்டில் இந்த இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன.