திறன்களை மேம்படுத்த சங்கம்

திறன்களை மேம்படுத்த சங்கம் தகவல் தொடர்பு நிபுணர்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டங் களை உருவாக்க 'டெக் டேலண்ட் அசெம்பிளி' என்ற புதிய சங்கம், இந்தத் துறையைச் சேர்ந்த பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தெரிவித் திருக்கிறது. இந்த திட்டங்களால் சுமார் 180,000 நிபுணர்கள் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப் படுகிறது.

தேசிய தொழிற்சங்க காங் கிரசுடன் தொடர்புடைய இந்த சங்கத்தின் உறுப்பினர்கள், வேலை தேடுவதற்கான இணைய தளங்களைப் பயன்படுத்தி, தங்கள் திறனுக்கேற்ற வேலை வாய்ப்பு களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இத்தகைய தளங்களால் புதிய உறுப்பினர்கள் தங்களது -திறன்களை மேம்படுத்த ஊக்க மடைவர் என எதிர்பார்ப்பதாக சங்கத்தின் தலைவர் இங் தியோங் கீ தெரிவித்தார்.

"ஊழியர்களின் நலன்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்து வதுடன் தகவல் தொடர்புத் துறையில் உள்ள அதிக ஊழி யர்களைப் பிரதிநிதிக்கும் நோக் கத்தில் நமது இணைப்பு வட்டங் களை விரிவாக்கம் செய்து வருகிறோம்," என்று தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு இங் சீ மெங் தெரிவித் திருக்கிறார். தகவல், தொடர்புத் துறை வளர்ந்து வருவதாகவும் இந்தத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு சுவாரஸ்யமான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் திரு இங் தெரி வித்தார். ஆயினும், அதிவேகமாக மாறிவரும் தொழில்நுட்பம் இந்தத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

"ஊழியர்களுக்கு உதவி செய்து அவர்களை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறாம். புதிய வேலைகளுக்குத் தயாராவது, தேவைக்கேற்ற திறன்களை கொண்டிருப்பது, புதிய வேலை முறைகளுக்கிடையே மீள்திற னுடன் இருப்பது போன்ற திறமை களை ஊழியர்களிடம் வளர்க்க நாங்கள் உதவ விரும்புகிறோம்," என்று திரு இங் சொன்னார்.

ஜூலை 19ஆம் தேதியில் இந்தப் புதிய சங்கம் தொடங்கப் பட்டது. தேசிய தொழிற்சங்கத்தின் மே தின கூட்ட உரையில் இந்தச் சங்கம் பற்றி முதன்முதலாக தெரி விக்கப்பட்டது. தகவல், தொடர்புத் துறையின் தொழில்நுட்ப மாற்றங் களைப் பற்றிய கலந்துரையா டல்கள், ஊழியர்களிடம் முதலாளி களின் எதிர்பார்ப்புகள் குறித்த உரைகள் உள்ளிட்ட புதிய திட்டங்களைச் சங்க உறுப்பினர்கள் எதிர்பார்க்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!