'மிரட்டல்களுக்கிடையே சிங்கப்பூரின் தற்காப்புக்கு தொழில்நுட்பம் முக்கியமானது'

'மிரட்டல்களுக்கிடையே சிங்கப்பூரின் தற்காப்புக்கு தொழில்நுட்பம் முக்கியமானது'

1 mins read

தற்காப்பு, அறிவியல், தொழில் நுட்ப அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் சிங்கப்பூரின் தற்காப்பு, பாதுகாப்பு, தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகள் காண உள்நாட்டு அமைப்புகளுடன் இணைய இருக் கின்றன. புது ஆய்வுக்கூடம் ஒன்று இவ்வாண்டின் இறுதிக்குள் இதற் கெனத் திறக்கப்படவுள்ளது. இது போன்ற ஆய்வுக்கூடம்வழி புத்தாக்கத்தின் வேகத்தைத் துரிதப்படுத்தலாம் என்று தற் காப்புத் தொழில்நுட்பச் சமூகம் நம்புகிறது. புதிய ஆய்வுக்கூடம் குறித்து நேற்று நடைபெற்ற தற்காப்பு தொழில்நுட்ப விருது நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் அறிவித்தார்.

உள்நாட்டில் ஏற்படக்கூடிய வளங்கள் தட்டுப்பாடு, வெளிநாடு களிலிருந்து வரக்கூடிய சிக் கலான மிரட்டல்கள் ஆகியவற்றை எதிர்நோக்கும் சிங்கப்பூரின் தற் காப்புக்குத் தொழில்நுட்பம் முக் கியமானதாகத் திகழ்கிறது என் றும் அவர் வலியுறுத்தினார். இதன் தொடர்பில் தற்காப்புத் தொழில்நுட்பச் சமூகத்துடன் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் தங்களை இணைத்துக்கொண்டு புதிய திட்டங்கள், திறன்கள் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர் என்றும் கூறினார்.