இந்தோனீசிய தனியார் வாடகை வாகனச் சேவை நிறுவனமான 'கோ-ஜெக்', ஓட்டுநர்களைச் சேர்க்கத் தன் இணையத்தளம் வழி முன்பதிவு செய்து வருகிறது. அடுத்த மாதப் பிற்பகுதியில் சிங்கப்பூரில் கால்பதிக்க உள்ள இந்நிறுவனத்தில் இணைவதற் காகத் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் பெரும் எதிர்பார்ப்பு களுடன் பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, இணையத்தளம் இயங்கத் தொடங்கிய அதே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துவிட்டதாக நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். "நாங்கள் வருவதற்கு முன்னரே பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன," என்றும் பேச்சாளர் நியூ பேப்பர் நாளிதழிடம் கூறினார்.
இதன் தொடர்பில் முன்பதிவு செய்த பல ஓட்டுநர்கள், 'கோ=ஜெக்' மேலும் சிறந்த பணி தொடர்பான சலுகைகளை வழங் கும் என்ற எதிர்பார்ப்புடன் ஆவ லாய் உள்ளனர். 'ஊபர்' இவ்வாண்டு மார்ச் மாதத்தில் தனியார் வாடகை வாகனச் சந்தையிலிருந்து வெளியேறிய பின், சில 'ஊபர்' ஓட்டுநர்கள் 'கிராப்' நிறுவனத் திற்கு மாறினர். ஆனால் இரு நிறுவனங்களையும் ஒப்பிடுகையில் 'கிராப்' அளித்த சலுகைகளில் குறைபாடு இருந்ததாகச் சிலர் உணர்ந்தனர். ஒரு நாளில் 12 முதல் 18 மணி நேரத்திற்கு வாகனம் ஓட் டினால்தான் போதுமான வருவாய் வருகிறது என்றும் கூறினர்.

