'ஸ்கில்ஸ்பியூச்சர்': புதிய திறன் மேம்பாட்டு முயற்சிகள்

'ஸ்கில்ஸ்பியூச்சர்': புதிய திறன் மேம்பாட்டு முயற்சிகள்

1 mins read

பெரியவர்களுக்கான கல்விப் பயிற்சிகளின் தரத்தை உயர்த்த புதிய ஸ்கில்ஸ்பியூச்சர் திட்டங் கள் அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் பயிற்றுவிப்பாளர்கள் கற்றலுக் கான மேல்நிலை சான்றிதழ் திட்டத்தில் சேரலாம் என்று வர்த்தகத்திற்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்திருக்கிறார். திட்டத்தின்வழி பயிற்சிகளை வகுப்பறைகளில், வேலை இடங் களில் அல்லது இணையத்தின் வாயிலாக எப்படி நடத்துவது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.

வேலை தொடர்பான மாற்றங் கள் உலகளவில் விரைவாக ஏற் படுவதால், இந்நிலையைச் சமா ளிக்க ஊழியர்களுக்கு இத்த கைய ஆதரவு வழங்கப்படுகிறது என்று திரு சீ, பெரியவர்களுக் கான கற்றல் மாநாடு 2018ல் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். "பல்வேறு துறைகளில் ஏற்படும் பெரும் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள், புதிய வர்த்தக முறைகள், புத்தாக்கங்கள் ஆகி யவை உருவாகலாம். ஆயினும் சூழலுக்கு ஏற்ற வாறு நமது ஊழியர்கள் மாற வேண்டும். அப்போதுதான் புதிய வாய்ப்புகளை அவர்களால் பெற முடியும்," என்று திரு சீ கூறினார். பயிற்சிகளை நடத்தும் பயிற்றுவிப்பாளர்களில் குறைந் தது 80 விழுக்காட்டினருக்கு தேவையான தகுதிநிலை இருக்க வேண்டும் என்பதை பயிற்சிகளை வழங்கும் அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.