புதிய மின்சார விநியோகத் திட்டங்கள்

புதிய மின்சார விநியோகத் திட்டங்கள்

1 mins read

'எம்1' தொலைத்தொடர்பு நிறுவ னமும் 'கெப்பல் எலெக்ட்ரிக்' மின்சார விநியோக நிறுவனமும் இணைந்து மின்சாரத்தை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளன. திறந்த மின்சார சந்தையை விரிவுபடுத்தும் நடவ டிக்கைகளில் புதிய முயற்சி அங்கம் வகிக்கிறது. இத்திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது. மின்சாரம் வாங்குவதற்கான திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தி யேக சலுகைகள், விலைக்கழிவுகள் ஆகியவை வழங்கப்படும் என்று இந்த இரண்டு நிறுவனங்கள், தங்களது கூட்டு அறிக்கை ஒன்றில் கூறின. இந்த ஆண்-டு ஏப்ரலில் திறந்த மின்சாரத் திட்டம் ஜூரோங்கில் வெளி யிடப்பட்ட பிறகு, இந்தப் புதிய விரிவாக்க நடவடிக்கை அறிமுகம் செய்யப்படுகிறது.

ஜூரோங்கில் நடந்த முதற்கட்ட வெளியீட்டின்போது, தகுதிபெற்ற வாடிக்கையாளர்கள், ஐஎம்எம் ஜூரோங் கடைத் தொகுதியிலுள்ள எம்1 கடையில் மின்சாரத் திட்டங்களுக்கு விண்ணப்பித்தனர். வியாழக்கிழமை முதல், 58க்கும் 78க்கும் இடையிலான அஞ்சல் எண்கள் உள்ள வீடுகளும் நிறுவ னங்களும் எஸ்பி குழுமத்தைத் தவிர மற்ற மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மாறலாம். மொத்தம் 13 நிறுவனங்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கலாம். திறந்த மின்சார சந்தையில் 'எம்1'க்கும் 'கெப்பல் எலெக் ட்ரிக்'க்கும் இடையிலான இந்த கூட்டு முயற்சியால் வாடிக் கையாளர்கள் பயனடைவதாக 'எம்1' நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பி. சுப்ரமணியம் தெரிவித்தார். ஜூரோங்கில் நடத்தப்பட்ட முதற்கட்ட வெளியீடு நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாக 'கெப்பல் எலெக்ட்ரிக்'கூறியது.