தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சி

தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சி

1 mins read

கடந்த ஜூன் மாதம் சிங்ஹெல்த் கட்டமைப்பில் ஏற்பட்ட இணைய ஊடுருவலைத் தொடர்ந்து, சுகாதார பராமரிப்புத் துறையில் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய முயற்சிகள் எடுக்கப்பட் டுள்ளன. தகவல் கட்டமைப்பின் தொழில்நுட்ப விற்பனையாளர்களி டம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்று, சந்தேகப்படும்படி யான தொழில்நுட்ப சம்பவங்கள் நேர்ந்தால் அதுபற்றி 24 மணி நேரத்திற்குள் புகார் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு சேவையாளர்களின் தகவல் தொழில்நுட்ப சேவைகளை இயக்கும் 'இன்டிகிரெட்டடன் ஹெல்த் இன்ஃபர்மேஷன் சிஸ் டம்ஸ்' நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி மேற் கூறப்பட்ட புதிய நடவடிக்கை உடன், மேலும் 17 புதிய நடவ டிக்கைகளை எடுப்பதை வழக்க மாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மனிதத் தவறுகள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதுடன் அத னால் ஏற்படக்கூடிய பாதிப்பையும் குறைக்க முடியும் என்பதை அறிக்கை தெளிவுபடுத்தியது. இவற்றுடன் அனைத்து பொது மருத்துவமனைகளின் பணியாளர் களுக்கும் இரு கட்ட மறைச்சொல் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப் படுகிறது. இதன் நவீன உத்திகளைப் பயன்படுத்தி ஊடுருபவர் களைத் தடுக்க முடியும் என்று அந்த அறிக்கை விளக்கியது.