ரிசக்தித் துறையில் முதன் முறையாக பத்து இளையர்கள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர். வர்த்தக, தொழில் அமைச்சின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் டாக்டர் டான் வூ மெங், அனைத்துலக எரிசக்தி வாரத்தை ஒட்டிய நிகழ்ச்சி ஒன்றில் 14 வயதுக்கும் 23 வயதுக்கும் இடை யிலான பத்து மாணவர்களைத் தூதுவர்களாக அறிவித்தார். எரிசக்தி சந்தை ஆணையம், தனது முயற்சிகள் இளையரைச் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் 'எரிசக்தித் தூதுவர்' திட்டத்தைத் தொடங்கியது.
நாட்டின் எரிசக்தித் துறைக்குப் பங்காற்ற இளையர் களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இளைய தூதுவர்கள் இரண்டு ஆண்டுகள் செயல்படுவர். எரிசக்தி தொடர்பான தகவல் களைச் சக இளையர்களுடன் பகிரும் பொறுப்பு இந்த தூதுவர் களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தித் துறை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் வேலை வாய்ப்புச் சந்தைகளுக்கும் சென்று இந்தப் பேராளர்கள் எரிசக்தி துறையைச் சார்ந்த தகவல்களைப் பகிரவேண்டும். எரிசக்தித் துறையைச் சேர்ந்த திறனாளர் களைச் சந்திக்கும் வாய்ப்பையும் இந்த இளையர்கள் பெறுவர். எரிசக்தித் துறையில் வேலை செய்வது பற்றியும் இவர்கள் தெரிந்துகொள்வர்.

