ஒரே இடத்தில் 14 மருந்தகங்கள்

ஒரே இடத்தில் 14 மருந்தகங்கள்

1 mins read

சாங்கி பொது மருத்துவமனை, 14 நிபுணத்துவ மருந்தகங்களைக் கொண்ட புதிய மருத்துவ நிலையத்துடன் முதிய நோயாளி களுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்றும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், மருத்துவ நிலையத்தின் அதிகார பூர்வ திறப்பு நிகழ்ச்சியில் நேற்று தெரிவித்தார். வெவ்வேறு திறன்களைக் கொண்ட மருத்துவ நிபுணத்துவ குழுக்களை இந்நிலையம் ஒருங் கிணைக்கிறது. சிக்கலான பிரச்சினைகளால் அவதிப்படும் நோயாளிகளைக் கவனிப்பதற் காகவே இந்த ஏற்பாடு செய்யப் பட்டதாக திரு கான் தெரிவித்தார். ஒன்பது மாடிகளைக் கொண்ட இந்த புதிய நிலையம், சாங்கி பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் வெவ்வேறு மருத்துவ நிபுணர்களை ஓரே நாளில் காண புதிய ஏற்பாடு வழிசெய்கிறது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லவேண்டிய தேவை குறைகிறது, " என்று திரு கான் கூறினார். மருத்துவ நிபுணர்களைக் காண செல்லும் நோயாளிகளில் 28 விழுக்காட்டினருக்கு, ஒன் றுக்கு மேற்பட்ட நிபுணர்களைப் பார்க்க வேண்டியுள்ளதாக சாங்கி பொது மருத்துவமனையின் பேச் சாளர் தெரிவித்தார். மருத்துவமனைகளிலிருந்து வீட்டுக்குச் செல்லும் நோயாளி களைப் பராமரிக்க சாங்கி பொது மருத்துவமனை 2017 ஏப்ரலில் தொடங்கிய திட்டத்தையும் திரு கான் பாராட்டினார்.