தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பட்டதாரிகள் பட்டயப் படிப்பில் சேர அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அவை, வேலை பார்த்துக் கொண்டே படிக்க வகை செய்கின்றன. தொழில்நுட்பக் கல்விக் கழகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 10 புதிய தொழில்நுட்ப பட்டயப் படிப்புச் சான்றிதழ்களை வழங்கும். அந்தப் படிப்புகளில் சுமார் 350 பேர் சேரலாம். அவற்றில் சேர்வோர், படித்துக்கொண்டே தங்கள் பாடத்திட்ட நேரத்தில் 70 விழுக்காட்டை வேலையில் செலவிட்டு பயிற்சி பெறலாம். முதலாளிகளுடன் சேர்ந்து புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின் றன. தொழில்துறைக்கு ஏற்ற, தேவையான தேர்ச்சிகளை அவை போதிக்கின்றன என்று தொழில்நுட்பக் கல்விக் கழ கத்தின் தலைமை நிர்வாகி திருவாட்டி லோ கா கெக் நேற்று தெரிவித்தார்.
10 புதிய பட்டயப் பயிற்சி வாய்ப்புகள்
1 mins read

