சூரிய எரிசக்தி ஒப்பந்தத்தில் 'செம்ப்கார்ப்' கையெழுத்து

சூரிய எரிசக்தி ஒப்பந்தத்தில் 'செம்ப்கார்ப்' கையெழுத்து

2 mins read

சிங்கப்பூரின் உற்பத்தி ஆலைகள் இரண்டில் கூரைகளில் சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தி பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் செம்ப்கார்ப் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று இந்நிறுவனம், சிங்கப்பூர் பங்குச்சந்தையில் நேற்று அறிவித்தது. சிங்கப்பூரில் ஒரே நிறுவ னத்திற்குச் சொந்தமான ஆகப் பெரிய சூரிய சக்தி வசதியாக இது அமையவிருக்கிறது. இது அதிகபட்சமாக 6.2 மெகாவாட்ஸ் மின்சாரத்தை வழங்கக்கூடியது. ஆண்டுக்கு இது கிட்டத்தட்ட மணிக்கு 7,435 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் ஆற்றல் உடையது.

இந்த அளவிலான மின்சாரம் ஓர் ஆண்டுக்கு 1,500 நான்கறை வீடுகளுக்கு போதுமானது. புதிய வசதியால் ஆண்டுக்கு 3 மில்லி யன் கிலோ கிராம் வரையிலான கரியமில வாயுவின் வெளியீடு குறைக்கப்படலாம். 680 கார்கள் சாலைகளில் வெளியிடும் கரியமில வாயுவின் அளவுக்கு இது ஒப்பானது. ஒரே கூரையின் மீது மிகப்பெரிய பரப்பளவில் சூரிய சக்தித்தகடுக்கான வசதி துவாஸ் பகுதியில் அமைக்கப்படும்.

இதில் 12,700க்கும் அதிகமான சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படும். இவற்றால் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஆலைகள் பயன் படுத்தும். சூரிய எரிசக்தித் துறையில் பெரிய நிறுவனங்களில் ஒன்றான செம்ப்கார்ப்பின் வர்த்தக நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் விரிவுபடுத்துகிறது. "2020ஆம் ஆண்டுக்குள் அதி கபட்சமாக 350 மெகாவாட் மின் சாரத்தைத் தயாரிக்கும் ஆற்றலைப் பெற சிங்கப்பூர் கொண்டுள்ள இலக்கிற்கு செம்ப்கார்ப் ஆதரவு அளித்து வருகிறது. மிக முக்கி யமாக இந்தத் தொழில்நுட்பம் அனைத்துலக அளவில் வளர்ந்து வருகிறது, " என்று செம்ப்கார்ப் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நீல் மெக்ரெகர் தெரிவித்தார்.