சமய நல்லிணக்கமும் பேசத் தயங்கும் கருப்பொருளும்

சமய நல்லிணக்கமும் பேசத் தயங்கும் கருப்பொருளும்

1 mins read
4fc411b0-09ca-435d-9905-d9741fe61311
-

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் மு.தங்கராசன், கமலா தேவி அரவிந்தன், கவிஞர்கள் முத்து மாணிக்கம், முருகடியான், வை. சுதர்மன் ஆகியோரது படைப்புகள் குறித்த தங்கள் பார்வையை இன்றைய மாணவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்தரங்கம் இந்த ஆண்டின் சிங்கப்பூர் எழுத் தாளர் விழாவின் முதல் தமிழ் அங்கமாக இடம்பெற்றது. ஆசிய நாகரிக அரும்பொருள கத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு மணி நேரக் கருத்த ரங்கில் மூத்த எழுத்தாளர்கள் வை. சுதர்மன், கமலாதேவி அரவிந்தன் ஆகியோரும் நான்கு பல்கலைக் கழக மாணவர்களும் பேசினர்.

மூத்த எழுத்தாளர்கள் முத்து மாணிக்கம், முருகடியான், தங்கரா சன் ஆகியோரால் கலந்து கொள்ள முடியவில்லை. மூத்த கவிஞர் முத்து மாணிக்கம், பக்திக் கவிதைகள் மூலம் சமய நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப் பதைக் குறிப்பிட்டார். அவரது படைப்புகள் குறித்துப் பேசிய நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக் கழக மாணவர் அருண் வாசுதேவ் கிருஷ்ணன். "இன்று சமய நல்லிணக்கத் திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றி நாங்கள் பேசு கிறோம். ஆனால் அன்றே அது குறித்து அவர் எழுதியுள்ளார். மூன்று முக்கிய சமயங்களைப் பற்றியும் அவர் கவிதை எழுதி யிருப் பது அந்தக் காலத்திலேயே சமய நல்லி ணக்கத்தைக் காட்டியுள் ளார்," என்றார் அவர்.