கோயிலில் தீபாவளி குதூகலம்

கோயிலில் தீபாவளி குதூகலம்

2 mins read
8d393ec8-94fd-4cf6-9e50-64ee4d03edb9
-

அருள்மிகு தெண்டாயுத பாணி கோயிலில் நேற்று தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற் பாடு செய்யப்பட்டு இருந்தது. வசதிகுறைந்த பின்னணியைச் சேர்ந்தவர்களுடனும் முதியோரு டனும் விழாக்கால கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் செட்டியார் கோயில் குழுமம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற் பாடு செய்திருந்தது. நண்பகலில் இருந்து சுமார் இரண்டு மணிநேரம் நடந்த இந்நிகழ்ச்சியில் கலை அம்சங்கள் நிறைந்திருந்தன. ஜூரோங் சென்ட்ரல், ஜூரோங் ஸ்பிரிங், ஜூரோங் கிரீன் உள் ளிட்ட வட்டாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் 'சன்லவ்' இல்லம், ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் இந்நிழ்ச்சியில் கலந்துகொண்டு பலனடைந்தனர்.

மேற்கூறப்பட்ட இடங்களில் இருந்து வந்த குடியிருப்பாளர்களு டன் அவர்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனக் கிட்டத்தட்ட 300 பேர் பங் கேற்ற தால் அக்குடியிருப்பாளர் களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிட்டியது. $50 ரொக்கமும் அரிசி, காப்பி தூள், 'மைலோ' பானத்தூள், பருப்பு உள்ளிட்ட குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய $30 மதிக் கத்தக்க அன்பளிப்புப் பை களும் பயனாளர்களுக்கு வழங் கப் பட் டன.

அத்துடன், அவர்களுக்கு மதிய வேளை உணவும் பரிமாறப்ப ட்டது. தீபாவளியை முன்னிட்டு செட் டியார் கோயில் குழுமம் பல ஆண்டுகளாக கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும் மேற்கூறப்பட்ட இடங்களிலிருந்து வந்த பயனாளர்கள் நேற்றைய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருப் பது இதுவே முதன்முறை என்றார் செட்டியார் கோயில் குழுமத்தின் கௌரவச் செயலாளர் ராமசாமி சொக்கலிங்கம். "ஆண்டுதோறும் வசதி குறைந்த பின்னணியைச் சேர்ந்தவ ர்களுடன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு செட்டியார் கோயில் குழுமம் தனி முக்கியத்துவம் அளித்து வருகிறது.