இளையரின் உன்னத சேவை

1 mins read
5011a574-f664-432e-b80c-e5b47e2bdfb0
-

தீபாவளியை முன்னிட்டு உட் லண்ட்ஸ் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு, 'எட்ஜ்எஸ்ஜி' அமைப்பின் கூட்டு முயற்சியுடன் சமூக ஒன்றுகூடல் நடவடிக்கைக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி ஏற்பாடு செய் தது. உட்லண்ட்ஸ் அடித்தள ஆலோசகர் அம்ரின் அமினின் முயற்சியில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை முதன்முறை யாக நடைபெற்றது. காலைப் பொழுதில் துடிப்புமிக்க தொண்டூழியர்கள் சுமார் 20 பேர், உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வசதி குறைந்த இந்திய குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று சுத்தம் செய்து, சாயம் பூசும் பணி யில் மும்முரமாக ஈடுபட் டனர்.

தொண்டூழியர்களின் கடின உழைப்பும் பேரார்வமும் வீடு களுக்கு புதுப்பொலிவைத் தந்தன. இதனால் வீட்டு உரிமையாளர்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. தீபாவளி கொண்டாட் டத்தில் அனைவரையும் உள்ளடக்குதல், சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத் தல், சமூகப் பிணைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட அம் சங்கள் இயல்பாகவே இருக்கும். மற்றவர் களுக்கு உதவிபுரிவது, உன்னதமான கொண் டாட்டங் களுக்கு வழிவகுக்கிறது என்று கூறினார் உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின்.