துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம் வழியாக நுழையும் சிங்கப்பூர் மோட்டார் சைக்கிள் களுக்கான கட்டணத்தை மலேசியா ரத்து செய்ததை அடுத்து, சிங்கப்பூரும் இதன் கட்டணத்தை ரத்து செய்யும் என சிங்கப்பூர் தெரிவித்திருக் கிறது. அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து மலே சியா தனது கட்டணத்தை ரத்து செய்யும் என்றும் அதற்கு ஈடான நடவடிக்கையை சிங்கப்பூர் எடுக் கும் என்று போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் தெரி வித்தார். சிங்கப்பூரின் இரண்டாம் இணைப்புப் பாலம் வழியாகவும் பினாங்கின் இரண்டு பாலங்கள் வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிளோட்டிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என மலேசிய அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
மோட்டார் சைக்கிள் நுழைவுக் கட்டணம்: சிங்கப்பூர் ரத்து செய்யும்
1 mins read

