சுவா சூ காங் வட்டாரத்திலுள்ள எக்செகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண் டிய காவல் அதிகாரி, அதற்கு மாறாக இவர்களில் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டி னார். வான்டர்வேல் எக்செ கியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுக் குள் இந்த அதிகாரி நேற்று காலையில் சன்ன வழியே அத்துமீறி நுழைந்ததாக 'லியன் ஹ வான்பாவ்' நாளிதழ் தெரி வித்தது. வீட்டுக்குள் யாரோ நடமாடும் சத்தத்தைச் செவிசாய்த்த அங்கு குடியிருக்கும் மூதாட்டி ஒருவர், தமது பேரக்குழந்தைகள் இருக் கும் அறைக்குச் செல்ல முடிவு வெடுத்தால். அங்கு, தனது பணிப்பெண்ணைக் காவல் அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொண் டிருந்ததை மூதாட்டி கண்டார். கத்திரிக்கோலைக் கொண்டு இந்த ஆடவர் பணிப்பெண்ணை மிரட்டிக் கொண்டிருந்ததாக மூதாட்டி கூறினார்.
உதவிக்கான அழைப்பு காலை சுமார் 5.30க்குக் கிடைத் ததாகப் போலிசார் 'ஸ்ட்ரெட்யஸ் டைம்ஸ்' நாளி தழிடம் தெரி வித்தனர். முப்பது வயதாக இந்த ஆடவர் கைது செய்யப்பட்ட தாகவும் போலிசார் கூறினர். அவர் சிங்கப்பூரர் என்பதை 'ஸ்ட்ரெட்யஸ் டைம்ஸ்' தெரி வித்தது. இந்த கைது நடவடிக்கை ஆறு மணி நேரம் நீடித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. சிறப்பு நடவடிக்கை தளபத்திய அதி காரிகள் கூட்டுரிமை வீட்டு புளோக்கை முற்றுகையிட்டதாக சம்பவ இடத்தில் இருந்தோர் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 50 அதிகாரிகளும் 18 போலிஸ் வாகனங்களும் அங்கு சுற்றி இருந்ததையும் ஷின் -மின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. விசாரணை தொடர்கிறது.

