மரம் நடும் நிகழ்ச்சியில் பிரதமர் லீ

மரம் நடும் நிகழ்ச்சியில் பிரதமர் லீ

2 mins read
30206703-42ee-40da-a1ff-8f755387e9d1
-

பிரதமர் லீ சியன் லூங், அங் மோ கியோ குழுத்தொகுதியையும் செங்காங் வெஸ்ட் தனித்தொகு தியையும் சேர்ந்த சுமார் 1,500 குடியிருப்பாளர்களுடன் வருடாந் திர மரம் நடும் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டார். திரு லீயுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கோ பு கூன், திரு ஆங் ஹின் கீ, திரு கான் தியாம் போ, டாக்டர் லாம் பின் மின் மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு, சுட்டெரிக்கும் வெயிலில் 'அகத்திஸ் பொர் னிசிஸ்' வகையைச் சேர்ந்த மரங் களை நட்டினர். நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த வட்டாரவாசிகள், குடும்ப கேளிக் கை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இதில் இடம்பெற்றன.

ஃபர்ன் ஸ்ப்ரிங் மற்றும் ஃபர்ன் வியூ வட்டாரங்களையும் யோ சு காங் ரோடு வழியாக உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தையும் இணைக் கும் கூரைவேய்ந்த நடை பாதை ஒன்றையும் திரு லீ திறந்து வைத்தார். ஃபர்ன்வேல் லேனில் உள்ள புளோக் 404இலுள்ள பல மாடி கார் நிறுத்தத்தின் மூன்றாவது மாடியிலிருந்து இந்த நடைபாதை தொடங்குகிறது. கடந்த வாரம் கட்டி முடிக் கப்பட்ட இந்த நடை பாதையைக் கட்டுவதற்காக வட் டாரவாசிகள் 388,000 வெள்ளி யைத் திரட்டிய தாகவும் நடை பாதைக்கான யோசனையை அடித் தளத் தலைவர்கள் முன்வைத் ததாகவும் செங்காங் சவுத் பிரிவைச் சேர்ந்த திரு கான் தியாம் போ தெரிவித்தார்.

இந்த புளோக்குகளிலிருந்து பேருந்து நிலையத்திற்குச் செல்ல செங்குத்தான நிலத்தை கடந்து செல்லும் சிரமத்தை புதிய வசதி குறைக்கிறது. இனி அவர்கள், பல மாடி கார்நிறுத்தத்திலுள்ள மின்தூக் கியைப் பயன்படுத்தி மூன்றாவது மாடியிலிருந்து பேருந்து நிலைய த்திற்கு நடந்து செல்லலாம்.

பிரதமர் லீ சியன் லூங் மரம் ஒன்றுக்கு தண்ணீர் ஊற்றுவதை அங் மோ கியோ வட்டாரவாசிகள் சுற்றி நின்று பார்க்கின்றனர். ஃபர்ன்வேல் லேனில் உள்ள புளோக் 404இலுள்ள பல மாடி கார் நிறுத்தத்தையும் பேருந்து நிறுத்தம் ஒன்றையும் இணைக்கும் கூரைவேய்ந்த நடைபாதை ஒன்றையும் அவர் திறந்துவைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்