சிங்கப்பூர் மாணவியை மோதிய அமெரிக்கர் கைது

சிங்கப்பூர் மாணவியை மோதிய அமெரிக்கர் கைது

1 mins read
557ec21c-4869-446e-b028-289837831f6b
-

இம்மாதம் 1ஆம் தேதி அமெரிக் காவின் பஃப்ளோ பல்கலைக் கழகத்தில் பயிலும் 20 வயது சிங்கப்பூர் மாணவி ரேணுகா ராமநாதனை காரில் மோதிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியவரை போலிஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் 20 வயது மாணவரான ஹன்னா கிறிஸ்டியன்சன்தான் அவர் என்று போலிசார் கூறினர். அன்றைய தினம் ஹன்னா, விபத்து பற்றி போலிசுக்குத் தெரிவிக்காமல் அந்த இடத்தை விட்டு தப்பியோடியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

பஃப்ளோ பல்கலைக்கழகம் அமைந்துள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ஹன்னா. இருந்தாலும் அவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி இரவு 10 மணிக்கு ரேணுகா பல்கலைக் கழகத்தின் வடக்கு வளாகத்தைக் கடக்க முயன்றபோது, ஹன்னா ஓட்டிவந்த 'ஹோண்டா சிவிக்' கார் ரேணுகாவை மோதியது. சுயநினைவிழந்த ரேணுகாவுக்கு உடனடி அறுவை சிகிச்சை செய் யப்பட்டது.

விபத்தில் ரேணுகாவுக்கு இடுப்புப்பகுதி, கை ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் மூளையில் கடுமையான சேதமும் ஏற்பட்டது. ரேணுகாவில் உடல்நிலை தற் போது சீராக இருக்கிறது என்றும் அவர் எரி கவுண்டி மருத்துவ நிலையத்தில் குணமடைந்து வரு கிறார் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஹன்னாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட லாம் என்று நியூயார்க் சட்ட இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.