நாடாளுமன்றக் கூட்டத்தில் உணவங்காடி நிலைய விவகாரம்

1 mins read

நாளை கூடவிருக்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் உணவங்காடி நிலையங்கள் நடத்தப்படும் விதம் குறித்து விவாதிக்கப்படும். இது குறித்து 14 உறுப்பினர் கள் சுற்றுப்புற, நீர்வள அமைச்சரி டம் கேட்க வேண்டிய கேள்விக ளைத் தாக்கல் செய்துள்ளனர். உணவங்காடிக் கடைகளை நடத் துதல், தட்டுகளைத் திரும்ப வைக்கும் திட்டம் பற்றியும் விவா திக்கப்படும்.

இதைத் தவிர, அண்மையில் சிங்கப்பூர் ஆயுதப்படைகள் பயிற்சிகளின்போது ஏற்பட்ட விபத்துகள் குறித்தும் உறுப்பி னர்கள் பலர் தற்காப்பு அமைச் சரின் பதிலுக்காக கேள்வி களைத் தாக்கல் செய்துள்ளனர். பணம் செலுத்தும் சேவைகள் மசோதா, மருந்துகளைத் தவறா கப் பயன்படுத்துதல் திருத்த மசோதா போன்ற புதிய மசோதாக் களும் முதல் வாசிப்புக்குத் தாக் கல் செய்யப்படும். வெளிநாட்டுக் கொள்கை 2018 மறுஆய்வு தொடர்பில் அமைச்சர்நிலை அறிக்கையும் மன்றத்தில் இடம்பெறும்.