2019 முதல் நிதிக் கல்விப் பாடம்

2019 முதல் நிதிக் கல்விப் பாடம்

1 mins read

சிங்கப்பூரர்களுக்கு நிதிக் கல்வி அறிவை மேம்படுத்தி, தங்கள் பணத்தைச் சிறப்பான முறையில் நிர்வகிக்க அவர்களுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாக, அடுத்த ஆண்டு முதல், பலதுறைத் தொழிற்கல்லூரி முத லாம் ஆண்டு மாணவர்களுக்கும் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கும் நிதிக் கல்விப் பாடம் போதிக்கப்படும். இந்தக் கட்டாயப் பாடத்துக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டா. மாறாக, அதில் வரவு செலவைத் திட்டமிடுதல், இலக்கை வகுத்தல், கடன், சேமிப்பில் கூட்டு வட்டியின் தாக்கம் போன்ற நிதியறிவின் அடிப்படைகள் கற்றுக் கொடுக்கப் படும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் இரு கல்வி நிலையங்களின் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நிதிப் பாடங்கள் தொடங்கப்படும். காப்புறுதித் திட்டங்கள், முத லீடுகள், மத்திய சேமநிதி போன்ற தேசிய திட்டங்களைப் பயன்படுத் துதல் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்வதன் மூலம் நிதியறிவைப் பெருக்கிக்கொள்ளலாம். சிங்கப்பூரின் தேசிய நிதிக் கல் வித் திட்டமான 'மணிசென்ஸ்' இயக்கத்தின் தொடக்க விழா நேற்று 'அவர் தெம்பனிஸ் ஹப்' பில் இடம்பெற்றது. அதில் புதிய முயற்சிகள் பற்றி அறிவிக்கப் பட்டன.