சிங்கப்பூரர்கள் தொடர்பான விவ காரங்களில் அவர்களது கருத் துகளை அறிந்துகொள்வதற்காக அமைச்சர்கள் 2020ஆம் ஆண்டின் இடைப்பகுதிக்குள் வெவ்வேறு தொகுதிகளுக்குக் கூட்டு சமூகச் சந்திப்புகளை மேற்கொள்வர். இந்த இலக்கை அடைய முழு நேர அமைச்சர்கள் உள்பட அரசாங்க அலுவலகத்தில் பணி ஆற்றுவோர் அனைவரும் சந்திப் புகள் நிகழ்த்துவர்.
இதனைக் கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று தம் தொகுதியில் நடைபெற்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழக சாலைக் கண்காட்சியின் போது பகிர்ந்துகொண்டார். கட்டடங்களின் கீழ்த்தளங்கள், உடற் பயிற்சி இடங்கள், காப்பிக் கடை கள் போன்ற இடங்களில் பல அமைச்சர்கள் ஒரே சமயத்தில் மக்களுடன் சந்திப்பு நிகழ்த்துவது குறித்த திட்டத்தை திரு ஓங் ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இது போன்ற அமைச்சர் நிலையிலான சமூகச் சந்திப்புகள் அதிகரித்து கிட்டத்தட்ட வாரம் ஒருமுறை நடைபெறத் தொடங்கியுள்ளன. இளவயது அமைச்சர்கள், அலு வலகப் பணியாளர்கள் ஆகியோருக்கும் அவர்களின் தொகுதி அல்லாத குடியிருப்பாளர் களுக்கும் இடையே புரிந்துணர்வு மேம்பட இச்சந்திப்புகள் உதவும் என்றார் திரு ஓங்.

