நியாயமான வேலையிட நடைமுறைகளைச் செயல்படுத்திய ஈசனுக்கு விருது

ப. பாலசுப்பிரமணியம்

முழு நேரமாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபின் சுமார் இரண் டரை ஆண்டுகளுக்கு சுய தொழில் செய்தபோது சம்பளம் எப்போது வருமோ என்ற ஐயத் துடனே திரு ஈசன் சிவலிங்கம் காலத்தை ஓட்ட வேண்டியிருந்தது. சுய தொழில் செய்பவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை அவர் அன்று உணர்ந் தார்.

வேலையில் சிறந்து விளங்க அதை ஒரு தடையாகக் கருதினார். இந்தப் போக்கு தொடரக்கூடாது என்று முடிவெடுத்து 2001ஆம் ஆண்டில் தன்னோடு பணியாற்றிய சக ஊடக நண்பர்களுடன் 'ஹுட்ஸ் இங்க். புரொடக்ஷன்ஸ்' (Hoods Inc. Productions) எனும் நாடகம், விளம்பரம் தயாரிக்கும் ஊடக நிறுவனத்தைத் தொடங் கினார்.

ஊழியர்களுக்குக் காப்புறுதி எடுத்தல், ஒப்பந்தப் பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்கான சம்பளத்தைக் கொடுத் தல், தன்னிச்சையாகத் தொழில் செய்பவர்களுக்கு நேரத்துடனும் அவர்களின் பங்களிப்புக்கு ஏற் றவாறும் சம்பளம் கொடுத்தல் போன்ற வேலையிட நடைமுறை களைத் தம் நிறுவனத்தில் அறி முகம் செய்தார்.

இந்த மாற்றங்கள் சக ஊடக நிறுவனங்களிடையே நல்ல வர வேற்பைப் பெறவில்லை என்றாலும் அந்த நடைமுறைகளை திரு ஈசன் ஒருபோதும் கைவிட வில்லை. இவ்வாறு ஊடகத் துறையில் நியாயமான வேலையிட நடை முறைகளுக்கு ஆதரவளித்ததற்கு சிறப்புப் பிரிவில் ஈசன் சிவலிங்கத் திற்கு முத்தரப்பு கூட்டணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் முதலாளிகள் தேசிய சம்மேளனம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை இணைந்து இவ்விருது களைக் கடந்த புதன்கிழமை 'ரிசோட்ஸ் வோர்ல்ட்' மாநாட்டு மையத்தில் வழங்கின.

நியாயமான, முன்னேற் றகரமான பணி நடைமுறைகளுக் கான முத்தரப்பு உடன்பாட்டு (Tripartite Alliance for Fair & Progressive Employment Practices) நிர்வகிப்பில் முதல் முறையாக இவ்வாண்டு இவ்விருது கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

படத் தயாரிப்பில் ஈடுபடும் 'ஹுட்ஸ் இங்க். புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஈசன் சிவலிங்கம். படம்: TAFEP

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!