முதியோருக்கான மக்கள் கழக நல்வாழ்வுத் திட்டம்

1 mins read

இதுவரையில் நல்வாழ்வுத் திட்டத்தைச் சமூக மன்றங்களில் செயல்படுத்தி வரும் மக்கள் கழகம் இனி மூத்த குடிமக்களுக் காக வசிப்போர் குழுக்களுக்கும் விரிவுபடுத்த உள்ளது. இதனால் துடிப்பான முதுமைக்காலத்தை ஊக்குவிக் கும் நடவடிக்கைகளில் பங்கேற்க இனி முதியோர் தங்கள் குடி யிருப்பை விட்டு வெகுதூரம் போகத் தேவை இருக்காது. மக்கள் கழகத்தின் பத் தாண்டு நிறைவைக் கொண் டாடும் அதே வேளையில் இப்புது திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டத்தின் விருந்து நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், "நம் மூத்தோரின் மூப்படைவுக்கு ஒரு பரிவுமிக்க, ஒன்றுமட்ட சமூகம் தேவை. அதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு," என்றார் அமைச்சர். சுகாதார பரிசோதனைகள், வாராந்தர உடற்பயிற்சி நிகழ்ச் சிகள், சமூக ஆர்வலர் குழுக்கள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் இதில் அடக்கம். சிங்கப்பூரில் 650 வசிப்போர் குழுக்கள் உள்ளன. இவற்றில் மூன்றில் இரு பங் கிலாவது 2020ஆம் ஆண்டுக் குள் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தத் திட்டமுள்ளது.