விமானப் பயண பாதுகாப்பு இயக்கம்

விமானப் பயண பாதுகாப்பு இயக்கம்

2 mins read

விடுமுறைக் காலம் தொடங்கி விட்ட வேளையில் புதிய பாது காப்பு இயக்கம் ஒன்றை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) அறிவித்துள்ளது. இருக்கை வார் அணிவது, விமானம் புறப்படும்போதும் தரை இறங்கும்போதும் சன்னல் திரை திறக்கப்பட்டு இருப்பது போன்ற சில பாதுகாப்பு விதிமுறைகளைப் பற்றி விளக்கியும் அறிவுறுத்தியும் ஆணையம் தன் சமூக ஊடகத் தளங்களில் தகவல் வெளியிட்டு உள்ளது. உதாரணத்திற்கு, விமானத் தின் வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பயணிகள் பார்த்து அறிந்துகொள்ள சன்னல் திரை கள் திறக்கப்பட்டிருக்க வேண் டும்.

இதனால், விமான இறக் கைப் பகுதியிலிருந்து தீப்பொறி தெரிவது போன்ற ஏதேனும் ஆபத்து அறிகுறிகள் பயணிகள் கண்ணில்பட்டால், அவர்கள் உடனே விமான ஊழியர்களுக்குத் தெரிவிக்கலாம். "சிஏஏஎஸ் பல பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தினாலும் பயணிகளுக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது," என்றார் ஆணையத்தின் இயக்குநர் எலன் ஃபூ.

ப ற ந் து கொ ண் டி ரு க் கு ம் விமானத்தில் திடீரென ஏற்படும் அதிர்வுகளே அதில் பயணம் செய்வோருக்கு ஏற்படும் காயங்களுக்கு முக்கியக் காரணியாக இருந்து வருகிறது.

திடீரென்றும் மோசமாகவும் எச்சரிக்கை இன் றியும் அதிர்வு நிகழ்வதால் பலர் காயமடைகிறார்கள். இருக்கை வார் அணியாத பயணிகள் சில சமயங்களில் இருக்கையை விட்டுத் தூக்கி எறியவும் படுகிறார்கள் என்றார் திரு ஃபூ. தேவை ஏற்படும்போது வாரை அணிந்துகொள்ளலாம் என்று பயணிகள் எண்ணுவதும் தவறு என்றார். ஆபத்து வேளையில் சிந்தித்துச் செயல்பட நேரமிருக்காததால் எளிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது முக்கியம் என்று அவர் விளக்கினார். அறிவிக்கப்பட்டுள்ள இப்புது இயக்கம் பற்றிய கூடுதல் தகவல் களை இனி வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்.