சிங்கப்பூரில் சமூக உணர்வுடன் கூடிய நிறுவனம் நடத்தும் அங்காடி நிலைய முன் மாதிரி ஏற்பாட்டை அமல்படுத்துவதில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அந்த ஏற்பாடு பொதுவாக வலுவான நிலையில் இருக்கிறது என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வாடகையைக் குறைப்பதற்குப் பதிலாக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அந்த ஏற்பாட்டை அரசாங்கம் விட்டுவிடவேண்டும் என்று அவர் கருத்துரைத்தார். புதிய ஏற்பாட்டின் மூலம் அதிக தரமிக்க, பலதரப்பட்ட உணவு வகைகள் கட்டுப்படியாகக் கூடிய விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன.
அத்தகைய அங்காடி நிலையங்களில் பெரும்பாலான கடைக்காரர்களுக்கு வியா பாரம் நன்றாக நடக்கிறது என்று தெரிவித்த அமைச்சர், அந்தச் சாதனைகளை நாம் கெடுத்துவிடக்கூடாது என்றார். நாடாளுமன்றத்தில் சமூக உணர்வுள்ள நிறுவன அங்காடி நிலைய ஏற்பாடு தொடர்பில் பல உறுப்பினர்கள் 19 கேள்விகளைத் தாக் கல் செய்திருந்தார்கள். அவற்றுக்குப் பதில ளித்து அமைச்சர் பேசினார். இத்தகைய ஓர் ஏற்பாடு நன்கு நிலைபெறு வதற்குக் காலம் பிடிக்கும் என்றும் அதற்காக கொஞ்சம் காலம் பொறுமையாக இருக்கும் படியும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்த முன்மாதிரி 2015ல் தோற்றுவிக்கப் பட்டது. அங்காடி தொழில்துறையைக் கட்டிக் காக்கும் வகையில் இந்த ஏற்பாடு பல புதிய வர்களையும் இந்தத் தொழிலுக்கு ஈர்த்துள் ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இத்தகைய அங்காடி நிலையங்களில் கடைகளை நடத்துவோரின் சராசரி வயது 43 ஆக இருக்கிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் நிர்வகித்து நடத்தும் இதர 107 நிலையங்களில் கடை நடத்துவோரின் சராசரி வயது 60 ஆக இருக்கிறது. புதிய முறை பலனளித்து வருகிறது. இதில் அனாவசியமாக தலையிட்டு அரசாங் கம் வாடகையைக் குறைப்பதோ அகற்றுவதோ கூடாது என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதனிடையே, இந்த விவகாரம் பற்றி நேற்று மன்றத்தில் விளக்கம் அளித்த சுற்றுப் புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், அந்தப் புதிய ஏற்பாட்டின்கீழ் அங்காடி நிலையங்களை நிர்வகித்து நடத்தும் பெரிய நிறுவனங்களுக்குச் சமூக நோக்கம் அவசியமானது என்றார்.

