ரோஹிங்யா அகதிகள் மியன்மார் திரும்பியதும் உதவி வழங்க தயார்'

ரோஹிங்யா அகதிகள் மியன்மார் திரும்பியதும் உதவி வழங்க தயார்'

1 mins read
c135283b-f893-4f38-a624-00a98468cc32
-

ரோஹிங்யா அகதிகளுக்குக் கூடுதல் உதவி வழங்க சிங்கப்பூர் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மியன்மார் திரும்பியதும் அவர்களுக்கு உதவி வழங்க சிங்கப்பூர் விரும்புவதாக அவர் தெரி வித்தார். இதுதொடர்பாக நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் கேட்ட கேள்விக்கு நேற்று நாடாளு மன்றத்தில் அமைச்சர் பதிலளித் தார். ஆயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகள் இருக்கும் கோக்ஸ் பசார் முகாமில் நிலைமை மேம்பட்டிருப்பதும் இதற்குக் காரணம் என்று அமைச்சர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூடாரங்கள், போர்வை கள், உணவுப்பொருட்கள், மருந் துகள் ஆகியவற்றை ரோஹிங்யா அகதிகளுக்குச் சிங்கப்பூர் அனுப்பி வைத்தது. அவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ $270,000.

இவ்வாண்டு தொடக்கத்தில் கோக்ஸ் பசார் முகாமுக்குச் சென்று ரோஹிங்யா அகதிகளை நேரில் பார்த்தார் திரு லுயிஸ் இங். அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இம்மாதம் கோக்ஸ் பசார் முகாமுக்குச் சென்று ரோஹிங்யா அகதிகளை நேரில் கண்டார். "நான் முன்பு சுற்றுப்புற அமைச்சராகப் பதவி வகித்தவன். கோக்ஸ் பசார் முகாமில் சாக் கடைகள், கழிவறைகள், தண் ணீர் விநியோகம், உணவு விநி யோகம், சமைப்பதற்குத் தேவை யான எரிவாயு ஆகியவை சரியான முறையில் இருக்கின் றனவா என்பதை நான் கவனித் தேன். ரோஹிங்யா அகதிகளுக்கு பங்ளாதேஷ் நல்ல பல ஏற்பாடு களைச் செய்துள்ளது," என்றார் அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன்.