பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல், கள்ள பணத் தை நல்ல பணமாக்குதல் ஆகிய குற்றங்களை எதிர்கொள்ள அவற்றுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுகின்றன. இம்மாற்றங்கள் பயங்கரவாதம் (நிதியளிப்பை ஒடுக்கும்) சட்டம், லஞ்ச ஊழல், போதைப்பொருள் கடத்தல், பிற கடுங்குற்றங்கள் சட்டம் ஆகியவற்றில் செய்யப் பட்டது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ பேசினார். பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் குற்றங்கள் குறித்து புகார் செய்யாத தனிநபர்களுக்கு அதிகபட்சமாக $250,000 வரையில் அபராதமும் ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். குற்றச் செயல் அல்லது போதைப்பொருள் தொடர்பிலான சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் பற்றி புகார் செய்யத் தவறுவோருக்கு அதே தொகை யிலான அபராதமும் மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்ட னையும் விதிக்கப்படலாம்.
பயங்கரவாதத்துக்கு நிதி: கடுமையாக்கப்படும் தண்டனை
1 mins read

