பல்வேறு சமயங்களிடையே வெறுப் பைத் தூண்டும் பயங்கரவாத கருத்துகளை உள்ளடக்கிய மூன்று நூல்கள் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளன. தொடர்பு, தகவல் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்தது. தடை செய்யப்பட்டுள்ள அந்த நூல்களில் இரண்டு நூல்கள், ஒரே சமயத்தினரிடையே பிரிவினைவா த கருத்துகளைத் தூண்டும் வகை யில் அமைந்ததாக அமைச்சு குறிப் பிட்டது.
விரும்பத்தகாத பிரசுர சட்டத் தின்கீழ் அந்த மூன்று நூல்களை அமைச்சு தடை செய்துள்ளது. 'Things That Nullify One's Islam', 'The Wisdom of Jihad', 'What Islam Is All About' ஆகிய தலைப்புகளைக் கொண் டவை அந்த நூல்கள். இத்தகைய பயங்கரவாத கருத்துகள் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாக அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. "பல்வேறு சமய குழுக்களிடையே வன்முறையையும் வெறுப்புணர் வையும் தூண்டுவதை நோக்கமா கக் கொண்டுள்ள தனிநபர்களை அல்லது நூல்களை சிங்கப்பூர் அரசாங்கம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது," என அமைச்சு மேலும் கூறியது.

