வசதிகுறைந்த எல்லா வயது பிள்ளைகளுக்கும் உதவும் வழிகளை பணிக்குழு ஆராயும்

வசதிகுறைந்த எல்லா வயது பிள்ளைகளுக்கும் உதவும் வழிகளை பணிக்குழு ஆராயும்

1 mins read
5925c990-a410-460e-ad4e-a1ee16b4bad1
-

வசதிகுறைந்த இல்லங்களிலிருந்து வரும் பிள்ளைகள் தங்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் முன் னேறிச் செல்வதற்கு உதவப் பல அமைப்புகள் உள்ளடங்கிய பணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அது பாலர் பள்ளி மற் றும் தொடக்கப்பள்ளி பிள்ளை களிடம் கவனம் செலுத்தும் என் றாலும் எல்லா வயது பிள்ளை களுக்கும் அது உதவி செய்யும் என்று கல்விக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எட்டு உறுப்பினர்கள் கொண்ட 'அப்லிஃப்ட்' பணிக்குழுவுக்குத் தலைமை வகிக்கும் குமாரி இந்தி ராணி, இளையர் மற்றும் பள்ளிக் குச் செல்லும் சற்று அதிக வயது உள்ள பிள்ளைகளின் விவகாரங் களில் பணிக்குழு கவனம் செலுத் துமா என்று ஜூரோங் குழுத் தொகுதி உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாம் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார். இளைய பிள்ளைகள் மீது இப் போதைக்கு எங்கள் கவனம் உள் ளது. கல்வி அமைச்சு அதன் தொடர்பில் பிள்ளைகளின் நீண்ட கால வளர்ச்சிக்குத் திட்டங்களை வகுக்கும் என்றும் பிள்ளைகளின் எல்லா வயதினரையும் உள்ளடக்கக் கூடிய மூன்று அம்சங்களில் பணிக்குழு அடையாளம் கண்டுள் ளது என்றும் குமாரி இந்திராணி விவரித்தார்.

எல்லா வயது பிள்ளைகளையும் உள்ளடக்கக் கூடிய மூன்று அம்சங்களில் பணிக்குழு அடையாளம் கண்டுள்ளது என்று கல்விக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா விவரித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்