குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம், பாதுகாப்பு

குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம், பாதுகாப்பு

1 mins read
1bbb2c60-437b-4a2c-a845-adde78a54b37
-

மருத்துவ வாகனத்தில் செல்லும் சுயநினைவிழந்த நோயாளிகளின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மீட்பு நடவடிக்கை யில் ஈடுபடும்போது வீடுகள், அலு வலகங்கள் போன்றவற்றை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதற்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள் ளது. நாடாளுமன்றத்தில் நேற்று குடிமைத் தற்காப்பு திருத்த மசோ தாவை இரண்டாம் வாசிப்புக்குத் தாக்கல் செய்து இது குறித்து பேசிய உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ மேல் விவரங்களை வெளியிட்டார்.

இந்தத் திருத்த மசோதா, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசரநிலை மருத்துவ சேவை வழங்குவோர் நோயாளி களின் அடையாளத்தைக் கண்டு பிடித்து, தேவையான சுகாதாரத் தகவலைச் சுகாதார அமைச்சிட மிருந்து பெற்றுக்கொண்டு, அதற் கேற்றவாறு மருத்துவ சிகிச்சை அளிக்க வகை செய்கிறது என்று திருவாட்டி டியோ விளக்கினார். கடந்த ஆண்டில் குடிமைத் தற் காப்புப் படை கவனித்த மருத்துவ அவசரநிலை நோயாளிகள் 165,000 பேரில் 8 விழுக்காட்டினர் அதாவது 14,000 பேரின் அடை யாளத்தைக் கண்டு பிடிக்க முடிய வில்லை.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும்போது வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்