பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வெளிநாட்டவர்கள் குறைவு

பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வெளிநாட்டவர்கள் குறைவு

1 mins read

சிங்கப்பூரிலுள்ள பொது சுகாதார நிறுவனங்களில் நோயாளி களாக வருவோரில் வெளிநாட்டினர் சிறுபான்மையினராக உள்ளதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று கூறினார். சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டு நோயாளிகள் குறித்துத் தடை செய்வதற்கான அமைச்சின் முடிவைத் தொடர்ந்து சலுகைக் கட்டணத்தில் மருத்து வரைக் காண விரும்பும் நோயாளிகளின் சந்திப்புகள் துரிதப்படுத்தப்படுமா என்று அல்ஜூனிட் குழுத்தொகுதி உறுப்பினர் பிரித்தம் சிங் கேள்வி எழுப்பினார். அத்துடன் வெளிநாட்டு நோயாளிகள் சிங்கப்பூரர்களின் இடங்களை எடுத்துக்கொள்கிறார்களா என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி உறுப்பினர் செங் லி ஹூய் கேள்வி கேட்டார்.

இவற்றுக்கு டாக்டர் லாம் இவ்வாறு பதிலளித்தார். வெளிநாட்டு மருத்துவமனை முகவர்கள் ஆலோசனை வழங்கி நோயாளிகள் சிங்கப்பூரின் பொது சுகாதார நிறுவனங்களை நாடுவது 2013ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 0.4 விழுக் காடாக இருந்தது. ஆனால் இம்முகவர்களுடன் மருத்துவ மனைகள் செய்திருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நிறுவனங்கள் அதற்கேற்ப நிறுத்திக்கொண்டன. சென்ற ஆண்டு மட்டும் பொது மருத்துவமனைகளுக்கு 10,900 வெளிநாட்டு நோயாளிகள் சென்றனர் என்றும் இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 1.5 விழுக்காடு என்றும் டாக்டர் லாம் தெரிவித்தார்.