தனியார் வீடுகளை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் திட்டத்தை விரும்பாத குடியிருப்பாளர்களும் விற்பனையாளரின் முத்திரை வரியைச் செலுத்தவேண்டியிருக்கும். தற்காலிகக் காலகட்டத்தின்போது விற்பனை நிகழ்ந்தால் ஒரு தனிப்பட்ட வீட்டு உரிமையாளர் சம்மதம் தெரிவித் தாலோ அல்லது எதிர்த்தாலோ சரி, விற்பனையாளரின் முத்திரை வரியைக் கட்ட வேண்டும் என்று நிதி இரண்டாம் அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று கூறினார்.
ஒட்டுமொத்த விற்பனையைத் தொடங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதோருக்கு விற்பனையாளரின் முத்திரை வரி விலக்கு அளிக்கப்படுமா என்று மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியின் லிம் பியாவ் சுவான் எழுப்பிய கேள்விக்கு தேசிய வளர்ச்சி அமைச்சருமான திரு வோங் பதிலளித்தார். ஒட்டுமொத்த விற்பனைக்குரிய சொத்துகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர், சம்மதம் தெரிவித்தால் கூட்டு விற்பனைகள் குழு விற்பனைக் கொள் முதல் ஒப்பந்தத்தில் ஈடுபட அதிகாரத்தைப் பெறுகிறது.

