கார்களின் சிஓஇ கட்டணத்தில் சரிவு

கார்களின் சிஓஇ கட்டணத்தில் சரிவு

1 mins read

வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான (சிஓஇ) ஆகக் கடைசி ஏலக்குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளில் கட்டணங்கள் சரிந்தன. 1,600 சிசிக்கு உட்பட்ட கார்களுக்கான கட்டணம் $28,199லிருந்து குறைந்து $25,000 ஆனது. 1,600 சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான கட்டணம் $32,302லிருந்து $31,101க்குச் சரிந்தது. பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $32,000லிருந்து குறைந்து $30,959 ஆனது. மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் $2,509லிருந்து ஏற்றம் கண்டு $2,989 ஆனது. வர்த்தக வாகனங்களுக்கான சான்றிதழ் கட்டணம் $29,501லிருந்து $27,509க்குக் குறைந்தது.