ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் பேனாக் கத்தியால் பெண்ணைத் தாக்கிவிட்டு, தப்பியோடிய இரு ஆடவர்கள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். ஒரு வீட்டில் தங்களைப் பூட்டிக்கொண்ட அவர்களை நான்கு மணி நேரத்துக்குப் பிறகு போலிஸ் கைது செய்தது. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 51, புளோக் 501ல் பெண்ணைத் தாக் கிய இந்தச் சம்பவம் பற்றி அன்று பிற்பகல் 2.45 மணிக்கு போலி சுக்குத் தகவல் கிடைத்தது. முகத்தில் காயங்களுடனும் கைகளில் ஆழமான வெட்டுக் காயங்களுடனும் இருந்த அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பெண்ணைத் தாக்கியவர்கள் சம்பவ இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்கள் வழி யாக தப்பியோடியவர்களின் அடை யாளத்தைப் பின்னர் உறுதி செய் தனர். சிறப்பு செயல்பாட்டுத் தளபத் திய அதிகாரிகளின் உதவியுடன் இவர்கள் பின்னர் பிடிபட்டனர். 30 வயதான இந்த இரண்டு ஆட வர்கள், ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 42ல் உள்ள தங்கள் வீட்டில் பூட்டிக் கொண்டனர். இறுதியாக, பூட்டுக் கொல்லர் ஒருவரின் உதவியுடன் போலிசார் வீட்டுக்குள் நுழைந்து இவர்களைக் கைது செய்தனர்.

