ஸ்கூட்-டைகர்ஏர் விமானத்தில் பயணம் செய்த பரஞ்ச்பே நிரஞ்சன் ஜெயந்த், 34, என்ற ஆஸ்திரேலியர், விமானப் பணிப்பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். சிங்கப்பூ ரரான அந்த விமானப் பணிப்பெண்ணுக்கு வயது 25. திருமணம் ஆன அந்த ஆடவருக்கு நேற்று மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டபோது மூன்றாவது மானபங்கக் குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சிட்னியிலிருந்து சிங்கப்பூருக்குக் கடந்த ஆகஸ்ட்டில் வந்துகொண்டிருந்த அந்த விமானத்தில் அந்த ஆடவர், இந்தக் குற்றச்செயல்களைப் புரிந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மானபங்கம்: ஆடவருக்குச் சிறை
1 mins read

