உள்நாட்டு ஏற்றுமதி உயர்வு

உள்நாட்டு ஏற்றுமதி உயர்வு

1 mins read

சிங்கப்பூரில் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 8.0% அதிகரித்தன. இது எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகம். மின்னணு சாரா பொருட்களின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததே முக்கியமான காரணம். தொடர்ந்து எட்டாவது முறையாக இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த வர்த்தகம் அதிகரித்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரைப்பட்ட காலத்தில் வர்த்தகம் 14.7% கூடியது. இது மார்ச் முதல் ஜூன் வரைப்பட்ட 2வது காலாண்டில் 10.2% ஆக இருந்தது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இவை தெரியவருகின்றன.

எண்ணெய் மற்றும் எண்ணெய் சாராத வர்த்தகத்தில் இடம்பெற்றுள்ள அதிகரிப்பு காரணமாக இந்த நிறுவனத்தின் 2018ஆம் ஆண்டிற்குரிய அதிகாரபூர்வ முன்னுரைப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் 3வது காலாண்டில் சேவைத்துறையில் இடம்பெற்ற மொத்த வர்த்தகம் 3% கூடி $120.2 பில்லியனாக இருந்தது.