தலைமைத்துவ மாற்றத்தில் அதே பாணியே தொடரும்

2 mins read
9e6e69a8-2a51-49f7-921b-2cabd6deb2dd
-

எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டின் நலனுக்குத் தொண்டாற் றும் தலைவர்களைப் பெற்று இருப் பதே சிங்கப்பூரின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். இத்தகைய தலைவர்களைக் கொண்ட தலைமைத்துவக் குழு வையே சிங்கப்பூர் இதுநாள் வரை யில் பெற்றுவந்துள்ளது. இளம் தலைமுறைத் தலைவர்களும் இந்தத் தலைமைத்துவ பாணியி லேயே ஒருமித்த கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார். இளம் தலைமுறைத் தலைவர் கள் சிங்கப்பூருக்கு ஆக வலுமிக்க குழுவை அமைப்பதிலேயே ஒரு மித்த கவனம் செலுத்தி வருகிறார் கள் என்றும் ஒவ்வொரு தலை முறையினரும் தங்களுடைய சொந்தக் கனவுகளை நனவாக்க முடியும், சுயாதிபத்திய, சுதந்திர, வெற்றிகரமான நாடாகத் திகழ முடிகின்ற சிங்கப்பூரை உறுதிப் படுத்துவதில் அவர்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார் கள் என்றும் திரு சான் தெரிவித் தார்.

ஒவ்வொரு தலைமுறை சிங்கப் பூரர்களையும் பொறுத்தவரையில், வெற்றி என்பதற்கான வர்ணனை, அந்தத் தலைமுறைக்கு எந்த அளவுக்குச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம் என்பதைவிட அடுத்த தலைமுறையினர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே ஆகும் என்றும் அவர் விளக்கினார். இந்தப் பாணியே தொடர வேண்டும் என்று அவர் குறிப்பிட் டார். தொடர்ந்து வரும் இந்தத் தலைமைத்துவப் பாணியே மக்கள் செயல் கட்சியின் அடுத்து வரும் உயர் பதவி நியமனங்களிலும் இடம்பெறும் என்று திரு சான் தெரிவித்தார்.

வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (வலது) ஆசியா ஹவுஸ் மையத்தின் தலைமை நிர்வாகி மைக்கல் லாரன்சுடன் கலந்துரை யாடல் அங்கத்தில் பேசினார். படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்