பாலஸ்டியர் மரபுடைமைப் பாதை புதுப்பிப்பு; 30 இடங்கள் சேர்ப்பு

1 mins read

பாலஸ்டியர் மரபுடைமைப் பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதலாக 30 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. விரிவாக்கப்பட்ட மரபுடைமைப் பாதை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 1909ஆம் ஆண்டிலிருந்து டான் டோக் செங் மருத்துவமனையின் காசநோய், சீதபேதி நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட வார்டுகளைக் கொண்ட கட்டடமும் மரபுடைமைப் பாதையில் இணைக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை அந்த இடத்தை ரென் சி தாதிமை இல்லம் பயன்படுத்தியது. அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தை சிங்கப்பூர் நில ஆணையம் தற்போது நிர்வகித்து வருகிறது.

பாலஸ்டியர் மரபுடைமைப் பாதை 2006ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் 26 இடங்களை அது கொண்டிருந்தது. தேசிய மரபுடைமை வாரியம் நடத்திய ஆய்வுக்குப் பிறகு புதிதாக 30 இடங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. பாலஸ்டியர் மரபுடைமைப் பாதை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாதைக்கும் வெவ்வேறு கருப்பொருள்கள் உள்ளன. பாலஸ்டியர் சாலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்கள், நம்பிக்கை=திரைப்படம்-=உணவு, பாலஸ்டியர் வட்டாரத்தின் வளர்ச்சி ஆகியவை அந்த மூன்று பிரிவுகளாகும்.