சிங்கப்பூரின் இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சி 3% - 3.5% என முன்னுரைப்பு

சிங்கப்பூரின் இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சி 3% - 3.5% என முன்னுரைப்பு

1 mins read

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 3லிருந்து 3.5 விழுக்காடு வரை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 2.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அரசாங்கத்தின் முன்னுரைப்பைவிட இது குறைவு. இரண்டாம் காலாண்டில் பொருளியல் 4.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சியை வர்த்தக, தொழில் அமைச்சு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1.5லிருந்து 3.5 விழுக்காடு வரை மெதுவடையக்கூடும் என்று அதில் முன்னுரைக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது.