உயரும் வட்டி விகிதங்கள்; வீடு வாங்குவோருக்கு எச்சரிக்கை

உயரும் வட்டி விகிதங்கள்; வீடு வாங்குவோருக்கு எச்சரிக்கை

1 mins read

வட்டி விகிதம் அதிகரிக்கும் சாத்தியத்தைக் கருத்தில் கொள்ளுமாறு வீடு வாங்க எண்ணம் கொண்டிருப்போருக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது, விற்பனைக்கு விடப்பட இருக்கும் வீடுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது நல்லது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டில் மூன்றாம் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் குடும்பங்களின் கடன் விகிதம் 3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஆணையம் கூறியது.

இதே காலகட்டத்தில் வீட்டுக் கடன்கள் 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளன. குடும்பங்களின் கடன் அதிகரிப்பு அவற்றின் வருமான வளர்ச்சியுடன் ஒத்துப்போவதாக ஆணையம் குறிப்பிட்டது. உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் குறித்து நிறுவனங்களும் குடும்பங்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.