தற்காப்பு அமைச்சர்: சிங்கப்பூரின் கடல்வழித் தொடர்பு தொடர்ந்து பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்

1 mins read

கடல்கொள்ளையர்கள், பயங்கர வாதிகள் ஆகியோரை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேர்ந்த 99 அதிகாரிகளுக்கு நேற்று வெளிநாட்டுச் சேவை பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதிகாரிகளின் சிறந்த சேவையைக் கௌரவிக்கும் வகை யில் அவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென். இந்தப் பதக்கம் வழங்கும் விழா தற்காப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது.

பதக்கம் பெற்றவர்களில் 53 பேர் மூன்று மாதங்களுக்கு ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். எதிர்பார்க்கப்பட்டதைவிட அதி காரிகள் அதிகம் பங்களித்ததாக பணிக் குழுவுக்குத் தலைமை தாங்கிய 43 வயது கர்னல் சோ ‌ஷீ டாட் தெரிவித்தார். சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக் கையில் ஈடுபட்டபோது அந்தக் கடல் பகுதியில் கடல்கொள்ளைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பதக்கம் பெற்ற ஏனைய 45 பேர் ஐஎஸ் பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க எடுக்கப்பட்ட முயற்சி களுக்குப் பங்களித்தவர்கள்.

ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்ட பன்னாட்டு கூட்டணிப் படைக்கு அவர்கள் உதவினர். ஐஎஸ் பயங்கரவாதி களுக்கு எதிரான போரில் ஆதரவு வழங்க சிங்கப்பூர் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது என்றார் அமைச்சர் இங். மத்திய கிழக் கிலிருந்து தென்கிழக்காசியா வுக்குப் பல ஐஎஸ் பயங்கரவாதிகள் நாடு திரும்புவர் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் அதனை முன்னிட்டு சிங்கப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட் டுள்ளதாகவும் அமைச்சர் இங் கூறினார்.