நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய தீயணைப்பு வாகனம்

நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய தீயணைப்பு வாகனம்

1 mins read

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, தனது ஆகப் புதிதான தீயணப்பு வாகனத்தைப் பற்றிய விவரங்களை நேற்று வெளி யிட்டது. 'டார்ட் எம்ஃபிபியஸ் வெஹிக்கல்' (டிஏவி) என்ற இந்த வாகனம் நிலத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திலும் நீரில் 25 நோட்ஸ் வரையிலும் செல்லக்கூடியது.

கடலோரத் தீயணைப்பு, நீரில் மீட்புப் பணிகள் ஆகியவற் றுக்காக இது பயன்படுத்தப்படும். நிலத்தி லிருந்து நீருக்குள் இறங்கி செயல்பட இதற்கு 15 நிமிடங்கள் மட்டும் போதும். நீரேற்றிகள், தீயணைப் பான்கள் ஆகியவற்றுடன் தொலைக்கட்டுப் பாட்டுக்கருவி வசதிகளும் இதில் உள்ளன. புதிய வாகனத்தால் 30 முதல் 40 நிமிடங்கள் வரையிலான நேரமும் எட்டு அதிகாரிகளின் உழைப்பும் மிச்சப்படும் என லெஃப்டெனன்ட் கர்னல் சியூ கெங் டொக் தெரிவித்தார். 'டிஏவி' அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், நீருக்குள் நீந்தக் கூடிய இயந்திர மனிதக் கருவி ஒன்றும் இந்த வாகனத்தில் சேர்க்கப்படும் என்றார் லெஃப் டெனன்ட் கர்னல் சியூ.