தொலைக்காட்சிப் பெட்டி செயலிகளுக்கு இணையத்தைத் தடைசெய்ய உத்தரவு

தொலைக்காட்சிப் பெட்டி செயலிகளுக்கு இணையத்தைத் தடைசெய்ய உத்தரவு

1 mins read

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றைப் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தப்படும் தொலைக்காட்சிப் பெட்டி செயலிகளுக்கான இணையத்தைத் தடைசெய்ய உயர் நீதிமன்றம் இணையச் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தச் செயலிகள், பதிப்புரிமை சட்டங்களை மீறுவதாக ஆசிய காணொளித் துறைச் சங்கம் தெரிவித்தது. சிங்நெட், ஃபாக்ஸ் நெட்வர்க், என்ஜிசி நெட்வர்க் ஏ‌ஷியா பிரிமியர் லீக் காற்பந்து சங்கம் உள்ளிட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததை அடுத்து இவ்விவகாரம் அக்டோபர் முதல் விசாரிக்கப்பட்டது. "சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதி, தொழில்நுட்பக் கண்காட்சிகள், இணையக் கடைகள் ஆகியவற்றில் இத்தகைய செயலிகளைக் கொண்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன," என்று காணொளித் துறைச் சங்கம் சுட்டியது.