ஃபயர்ஃபிளைக்கு மலேசியா அனுமதி வழங்கவில்லை

ஃபயர்ஃபிளைக்கு மலேசியா அனுமதி வழங்கவில்லை

1 mins read

மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உரிய அனுமதியை வழங்க தவறியதால் சிங்கப்பூருடனான 'ஃபயர்ஃபிளை' விமான நிறுவனச் சேவைகள் அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் தனது செயலாக்கத்தை சிலேத்தார் விமான நிலையத்திற்கு மாற்ற 'ஃபயர்ஃபிளை' இணங்கியது. வரும் டிசம்பர் 1ஆம் தேதியில் இது நடைபெறும் என்று அப்போது முடிவு செய்யப்பட்டிருந்தது. மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தனது அக்கறையைத் தெளிவுபடுத்த கேட்டுள்ளதாக சிங்கப்பூரின் சிவில் விமானத்துறை ஆணையம் தெரிவித்தது. 'ஃபயர்ஃபிளை' நிறுவனம், மலேசிய ஏர்லைன்சின் கிளை நிறுவனமாக உள்ளது.