'டிமென்‌ஷியா' தொடர்பிலான முதலாவது மூலிகைத் தோட்டம்

'டிமென்‌ஷியா' தொடர்பிலான முதலாவது மூலிகைத் தோட்டம்

1 mins read
36df85b9-87d4-489a-8730-a7511566a936
-

'டிமென்‌ஷியா' எனப்படும் முது மைக்கால ஞாபகமறதி நோயாளி களுக்கு மன அமைதியைக் கொடுத்து, முதுமையடைதலை வெற்றிகரமாக ஆதரிக்கும் வகை யில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டை ஒன்றில் 'டிமென்‌ஷியா' தொடர்பிலான மூலிகைத் தோட்டம் ஒன்று திறக் கப்பட்டுள்ளது. ஹோங்கா நார்த் தொகுதியில் உள்ள புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 2, புளோக் 419ல் அமைந்துள்ள இந்தத் தோட்டத்தை நேற்றுக் காலை திறந்துவைத்தார் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சரும் சுகாதார மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஏமி கோர்.

அடித்தளத் தலைவர்களின் கருத்துகள், தேசிய பூங்காக் கழ கத்தின் மூலிகைத் தோட்டம் வடி வமைப்பு வழிகாட்டிகள் ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு சுவா சூ காங் நகர மன்றம் இந்த மூலிகைத் தோட்டத்தை உருவாக் கியுள்ளது. சக்கர நாற்காலியில் பயணம் செய்வோர் உட்பட முதியோர், வெவ்வேறு உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள தோட்டத்தில் தங்கள் தோட்டக்கலை ஆர்வத்தை வெளிப்படுத்தலாம். துடிப்பான வருகையாளர்கள் தரையில் வைக்கப்பட்டுள்ள தோட் டத்தில் தோட்டக்கலையை மேற் கொள்ளலாம்.

மேல் விவரம்: epaper.tamilmurasu.com.sg

ஹோங்கா நார்த் வட்டாரத்தில் டிமென்‌ஷியா தொடர்பிலான மூலிகைத் தோட்டத்தைப் பராமரிக்கும் பணியில் அதன் குடியிருப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். படம்: சுகாதார மேம்பாட்டு வாரியம்