ஹவ்காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் வரவேற்புக் கூடத்தில் நேற்று முன்தினம் தீ மூண்டது. ஹவ்காங் அவென்யூ 6, புளோக் 527ல் ஏற் பட்ட தீச்சம்பவம் குறித்து இரவு பத்து மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. வரவேற்புக் கூடத்தில் இருந்த பொருட்கள் நெருப்பில் சேதம் அடைந்ததாகவும் நீர் பாய்ச்சும் இயந்திரங்கள்வழி தீ அணைக்கப் பட்டதாகவும் படையின் பேச்சாளர் கூறினார். தீச்சம்பவத்தில் யாருக் கும் காயங்கள் ஏற்படவில்லை. கட்டடத்தின் எட்டாவது மாடி யிலுள்ள வீட்டில் இத்தீச்சம்பவம் ஏற்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குத் தெரிவிக் கப்பட்டது. வீட்டில் இருந்தோர் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப் பட்டது. தீ மூண்டதற்கான காரணம் குறித்து குடிமைத் தற்காப்புப் படை விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஹவ்காங் புளோக் 527, எட்டாவது மாடியில் உள்ள வீட்டின் வரவேற்புக் கூடத்தில் மூண்ட தீ. படம்: வான்பாவ்

