கரையோரப் பூந்தோட்டங்களில் அழையா விருந்தாளிகள்

கரையோரப் பூந்தோட்டங்களில் அழையா விருந்தாளிகள்

1 mins read
8c0fc4d2-2ab3-421a-a014-ff5a3e25eb39
-

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் 'ஸ்டாண்டட் சார்டர்ட்' நெடுந்தொலை ஓட்டத்தின்போது சில அழையா விருந்தாளிகளும் வந்திருந்தன.

நெடுந்தொலை ஓட்டத்தின் ஒரு பகுதி கரையோரப் பூந்தோட்டங்களின் வழியே செல்கிறது. அங்கே காலை 7.25க்கு பத்து நீர்நாய்களும் அவற்றின் ஆறு குட்டிகளும் காணப்பட்டன.

இரவு முழுவதும் அங்கு உறங்கிய நீர்நாய்கள் காலை 6 மணிக்கு அந்த பகுதியில் உணவைத் தேடிச் சென்றதாக குறிப்பிடப்பட்டது. பிறகு காலை 7.25மணிக்கு நீர்நாய்களும் அவற்றின் குட்டிகளும் இரை தேடச் சென்றுவிட்டன.

இச்சம்பவம் குறித்து நீர்நாய்கள் பாதுகாப்புக் குழுவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நீர் நாய்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், அதே சமயம் பொதுமக்களுக்கு இடையூறு எற்படாத வண்ணம் பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.