டான் டோக் செங் பல் மருந்தகத்தில் நோயாளிகளுக்கு தூய்மையற்ற சாதனங்களுடன் சிகிச்சை;

டான் டோக் செங் மருத்துவமனை யின் பல் மருந்தகத்தில் நவம்பர் 28ஆம் தேதிக்கும் டிசம்பர் 8ஆம் தேதிக்கும் இடையில் முறையாக சுத்தப்படுத்தப்படாத தூய்மையற்ற சாதனங்களைக் கொண்டு எட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்று இதனை தெரிவித்தது. இதனிடையே, சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், இத்தகைய சம் பவம் நிகழ்ந்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். சிங்கப்பூர் தேசிய பல் சிகிச்சை நிலையத்தில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் இதேபோன்ற சம் பவம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து சுகாதாரப் பராமரிப்பு முறை முழுவதும் பல அறிவுரைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இருந்தா லும் இப்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகக் அமைச்சர் கூறினார். சிகிச்சை சாதனங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமி கள் அறவே இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான இறுதிக் கட்ட சோதனைகள் நடத்தப்படாத நிலையில் அத்தகைய சாதனங்களைக் கொண்டு சென்ற ஆண்டு தேசிய பல் சிகிச்சை நிலையத்தில் 700க்கும் அதிக நோயாளிகளுக் குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் கிருமி தொற்று பாதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. அந்த நிலையத் தின் நான்கு ஊழியர்களுக்கு எதி ராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பே மிக முக்கியமானது என்பதை அமைச்சர் வலியுறுத்திக் கூறினார். டான் டோக் செங் மருத்துவமனை யில் பல் மருந்தகத்தில் நிகழ்ந் துள்ள சம்பவத்தைக் கடுமையான ஒன்றாகக் கருதுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதை அணுக்கமாக அமைச்சு ஆராயும். இதுபோன்ற சம்பவங்கள், சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மறுபடியும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த மேற்கொண்டு என் னென்ன நடவடிக்கைகள் எடுக் கலாம் என்பதை அமைச்சு பரி சீலிக்கும் என்றார் திரு கான்.

தூய்மையற்ற சாதனங்களைக் கொண்டு எத்தனை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதோ, பயனீட்டிற்காக எத்தனை சாதனங்கள் மருந்தகங்களுக்கு அனுப்பப்பட்டது என்பதோ தெரியவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!